உள்ளூர் செய்திகள்

கோவிலில் உள்ள அரங்கநாத பெருமாள், கோவில் சிதைந்ததில் மீதமுள்ள கருவறை மண்டபங்கள்.

சிதிலமடைந்து காணப்படும் திருபுவனம், ஸ்ரீரங்கநாதர் கோவில் புதுப்பிக்கப்படுமா?

Published On 2022-12-28 09:46 GMT   |   Update On 2022-12-28 09:46 GMT
  • இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
  • மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் என்ற கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூர் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்றெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கி றது.

இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டன.

ஆனால் அந்த பணிகள் முடியவில்லை. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

இதனால் பழைமை மாறாமல் இந்த கோவிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களால் அதற்காக திட்ட மிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன.

கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவிகளை வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும். எனவே பழையை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News