உள்ளூர் செய்திகள்
மேற்காரைகள் பெயர்ந்த நிலையில் காணப்படும் கூட்டுறவு வங்கி.
மேற்காரைகள் பெயர்ந்த நிலையில் உள்ள கூட்டுறவு வங்கி இடித்து அகற்றப்படுமா?
- சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
- கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.