உள்ளூர் செய்திகள்

ஜவுளி நகரம் இளம்பிள்ளையில் ரிங் ரோடு அமைக்கப்படுமா?

Published On 2023-03-20 15:28 IST   |   Update On 2023-03-20 15:28:00 IST
  • இளம்பிள்ளை அதன் சுற்று வட்டாரங்களில் தறி தொழில் பிரதானமாக உள்ளது.
  • இளம்பிள்ளையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மொத்த ஜவுளி நிறுவனங்கள் உள்ளன.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அதன் சுற்று வட்டாரங்களில் தறி தொழில் பிரதானமாக உள்ளது. இளம்பிள்ளையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மொத்த ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியா கும் பல விதமான ஜவுளி ரகங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன.

இங்கு 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன. தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகள் 100-க்கும் மேற்பட்ட சிறு சரக்கு வாக னங்கள் வந்து செல்கின்றன. மேலும் 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி வாக னங்கள் வந்து செல்கின்றன. காய்கறி சந்தை செயல்படு வதால் தினந்தோ றும் இளம்பிள்ளையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. குறிப்பாக பிரதி வெள்ளி மற்றும் பண்டிகை காலங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவ தால் மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமப்படு கின்றனர்.எனவே போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க இளம்பிள்ளை பகுதியை சுற்றி ரிங் ரோடு அமைக்கப்ப டுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து இளம்பிள்ளை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஓபுளிராஜன் கூறியதாவது:

இளம்பிள்ளயைில் தினமும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது.மேலும் 4 பள்ளிகள் செயல்படுவதால் காலை, மாலை நேரங்களில் மாண வர்கள் தவிக்கின்றனர்.சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும்.இளம்பிள்ளையை சுற்றி ரிங் ரோடு அமைத்தால் மேலும் தொழில் வளம் பெறுகும் இதற்கு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News