உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே வனப்பகுதியில் திடீரென பற்றி எரிந்த காட்டு தீ

Published On 2025-04-03 17:50 IST   |   Update On 2025-04-03 17:50:00 IST
  • தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
  • வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர்.

தருமபுரி:

தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கனூர் அருகே அரூர்-தருமபுரி பிரதான சாலையில் வனப்பகுதி அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மூக்கனூர் அருகே தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த பச்சிலைகளை வெட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள்ளாக வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர். இதனால் வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்த ஒருவர் தீயணைப்பு துறையினரிடம் ஒன்றரை மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருக்கிறது.

தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்தால் வர முடியாது என தெரிவிக்கிறார்கள் என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது தீயணைப்பு வீரரும், அவரிடத்தில் வர முடியாது என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News