உள்ளூர் செய்திகள்

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை படத்தில் காணலாம்.

உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

Published On 2023-08-07 15:49 IST   |   Update On 2023-08-07 15:49:00 IST
  • வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.
  • இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இதையடுத்து இன்று அதிகாலை மணியக்காரன் கொட்டாய், வாழைத்தோட்டம், கல்கூடஹள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை 2 ஆண் யானைகள் சேதப்படுத்தியது.

அந்த யானையின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி சென்று பார்த்த போது இரண்டு காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் தஞ்சம் அடைந்து இருந்தது.

இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு காட்டு யானைகள் ஒரே இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News