உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை- அதிகபட்சமாக கருப்பாநதி பகுதியில் 18.5 மில்லிமீட்டர் பதிவு

Published On 2022-10-12 09:19 GMT   |   Update On 2022-10-12 09:19 GMT
  • 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது நின்றுள்ளது.
  • இன்று காலை வரை கருப்பாநதி அணைப்பகுதியில் 18.5 மில்லிமீட்டர் மழை பதிவானது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது நின்றுள்ளது.

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்றும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக கருப்பாநதி அணைப்பகுதியில் 18.5 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதேபோல் செங்கோட்டை, ஆய்க்குடி, அடவிநயினார் அணைப்பகுதி, சிவகிரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவியில் இன்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். எனினும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. 

Tags:    

Similar News