உள்ளூர் செய்திகள்

முகேஷ் 

நெல்லையில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியரை கொலை செய்தது ஏன்?- கைதான 3 பேர் வாக்குமூலம்

Published On 2023-08-04 09:04 GMT   |   Update On 2023-08-04 09:04 GMT
  • குருந்துடையார்புரம் ரெயில்வே கேட் அருகே மர்ம கும்பல் முகேசை வெட்டிக்கொலை செய்தது.
  • முகேஷ் ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்து வந்துள்ளார்.

நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் அருகே உள்ள கீழ வீரராகவ புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் முகேஷ் (வயது 32). இவர் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவிதா (26) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கொலை

நேற்று முன்தினம் இரவு உணவு வினியோகம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற முகேசை அங்குள்ள குருந்துடையார்புரம் ரெயில்வே கேட் அருகே மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த மகராஜன் (20), அழகுமுத்து (22), முருகேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

முகேஷ் ஏற்கனவே ஊர் நாட்டாண்மையாக இருந்துள்ளார். அப்போது ஊரில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், முகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.

மேலும் கோவில் கொடை விழாவில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இருக்கும் வரை தங்களுக்கு இடைஞ்சல் தான் என்று அவர்கள் எண்ணியுள்ளனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சின்ன குட்டி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு முகேஷ்தான் காரணம் என நினைத்தும் அந்த வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்வார் என்று நினைத்தும் கைதா னவரின் ஆதரவாளர்களான முருகேஷ் உட்பட 3 பேரும் சேர்ந்து முகேஷை கொலை செய்ததாக போலீசாரிடம் கூறி உள்ளனர். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News