உள்ளூர் செய்திகள்
வீட்டை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து முதியவர் சாவு
- சிமெண்ட் சீட்டை சுத்தம் செய்த போது தவறி விழுந்தார்.
- தலையில் பலத்த காயம் அடைந்ததால் உயிரிழந்த பரிதாபம்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் கரியண்ண கவுடா (வயது64), கூலித்தொழிலாளி.
இவர் நேற்று,தங்கள் வீட்டு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட்ஷீட்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. குடும்பத்தினர் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கரியண்ண கவுடா உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.