உள்ளூர் செய்திகள்

ஜெயிலானி தெரு பகுதியில் நடைபெற உள்ள புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

தூத்துக்குடியை சிறந்த மாநகராட்சியாக மாற்றிட மக்கள் கருத்துக்களை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் - மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

Published On 2023-05-18 08:51 GMT   |   Update On 2023-05-18 08:51 GMT
  • மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்கப்படுகின்றது.
  • மக்கள் தங்களின் மேலான கருத்துக்களை வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் ,மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பதவியேற்ற கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்தி லும் சீரான குடிநீர் வழங்கப் படுகின்றது. மேலும் சீர்மிகு நகரமாகவும் சிறந்த மாநகராட்சியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிடவும் மக்கள் தங்களின் மேலான கருத்துக் களையும் வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம். https://tinyurl.com/rj8snbvm, Android Users @ Playstore https://tinyurl.com/mwf47eew, IOS Users @ Appstore https://tinyurl.com/4wduufea. இது போன்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் கருத்துக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்த்த அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக பரிசிலிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜெயிலானி தெரு பகுதியில் நடைபெற உள்ள புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News