உள்ளூர் செய்திகள்

  அணைக்கட்டில் மூழ்கிய வாலிபரை தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

கடலூர் அருகே நண்பர்களுடன் அணையில் குளித்த வாலிபர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

Published On 2022-09-21 07:56 GMT   |   Update On 2022-09-21 07:56 GMT
  • அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
  • நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

Tags:    

Similar News