உள்ளூர் செய்திகள்

மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-23 10:38 GMT   |   Update On 2023-08-23 10:38 GMT
  • 435 மனுக்களை விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருலோகி ஊராட்சி மாரியம்மன் கோவிலில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெற்றது. ராமலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம்.

கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 200 பயனாளிகளுக்கு ரூ. 70,73,002 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து செல்வம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணா துரை, மாவட்ட குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, திருலோகி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News