உள்ளூர் செய்திகள்
ஏழை பெண்களுக்கு பொதுநலன் மனித உரிமை காப்பாளர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்.
- பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
- குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர்:
பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.