உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடிநாள் நிதி அதிகமாக வசூல் புரிந்த மாவட்ட அலுவலருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தருமபுரியில் 93 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-08-08 15:10 IST   |   Update On 2023-08-08 15:10:00 IST
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 429 மனுக்கள் வரப்பெற்றன.
  • கொடிநாள் நிதி அதிகமாக வசூல் புரிந்த 3 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்கள்.

தருமபுரி,

தருமபுரி கலெக்டர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடை பெற்றது.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, கலெக்டர் தெரி வித்ததாவது:-

கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 429 மனுக்கள் வரப்பெற்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ், 67 பயனாளிகளுக்கு தலா ரூ.4,37,430- வீதம் மொத்தம் ரூ.2,93,07,810- மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணை களையும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.72,072- மதிப்பீட்டில் சலவை பெட்டிகளையும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுதொழில் செய்வதற்கு 15 பயனாளி களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் மானிய நிதிஉதவிகளையும் என மொத்தம் 93 பயனாளி களுக்கு ரூ.2.97 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், கொடிநாள் நிதி அதிகமாக வசூல் புரிந்த 3 மாவட்ட அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) நசீர் இக்பால், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் வெங்கடேஷ் குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News