உள்ளூர் செய்திகள்

மக்கள் நேர்காணல் முகாமில் பொது மக்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மக்கள் நேர்காணல் முகாமில் 587 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-29 09:35 GMT   |   Update On 2022-12-29 09:35 GMT
  • பயனாளிகளுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
  • முகாமில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் கூறினார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் வரவே ற்றார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, ரூபாய் 1000 மாதாந்திர உதவித்தொகை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூபாய்.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 20 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் இடு பொருட்கள், மானியம் மற்றும் பவர் டில்லர் என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து மனோரா கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்க 14000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் 1 ஏக்கரில் ஊருக்கு ஒரு வனம் திட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கவின்மிகு தஞ்சை தலைவர் ராதிகா மைக்கேல், ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர், குப்பத்தேவன் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News