தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார். அருகில் கலெக்டர் சாந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்பட பலர் உள்ளனர்.
தருமபுரியில் 225 பயனாளிகளுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
- 225 பயனாளி களுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
- உழவர் நலத்துறை யின் 4 பயனாளிகளுக்கு ரூ.60,000- மதிப்பீட்டில் கறவை மாடு பணி ஆணையினை வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை களின் சார்பில் 225 பயனாளிகளுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கலெக்டர் சாந்தி முன்னிலையில் வழங் கினார்.
விழாவில் வருவாய்த் துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.58.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணிக்கான நியமன ஆணையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் 4 பயனாளிகளுக்கு ரூ.60,000- மதிப்பீட்டில் கறவை மாடு பணி ஆணை யினையும், ஒருவருக்கு ரூ.135- மதிப்பில் 5 கிலோ ராகியினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவி யாளரை வைத்து கொள் வதற்கு ரூ.1000- உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25,000- உதவித்தொகைகளை வழங்கினார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.32,760- மதிப்பீட்டில் விலையில்லா சலவைப்பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.30, 000- மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் மாவட்டத்தில் அதிகமாக கொடிநாள் நிதி வசூல் செய்த 3 பயனாளி களுக்கு தலா 30 கிராம் வெள்ளிப்பதக்கங்களையும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் 60 பத்திரிக்கையாளர்களுக்கு பத்திரிக்கை நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் 225 பயனாளி களுக்கு ரூ.60.48 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவி யாளர் (நிலம்) நசீர் இக்பால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோக நாதன் உட்பட தொடர்புடைய அலு வலர்கள், பத்திரிக்கை யாளர்கள், பயனாளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.