உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

மக்கள் தொடர்பு முகாமில் 165 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-02-09 14:59 IST   |   Update On 2023-02-09 14:59:00 IST
  • மயிலாடுதுறை திருவாவடுதுறை கிராம ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
  • அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் திருவாவடுதுறை கிராம ஊராட்சி, நடராஜ சுந்தராம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் கலந்து கொண்டு 165 பயனாளிகளுக்கு ரூ.15.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

மக்கள் தொடர்பு முகாம் என்பது தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மக்கள் தொடர்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் மனுநீதி நாள் முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டங்களை கவனித்து பயனடையவும், மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும், இத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களும் இத்திட்டங்களை பெற்று பயன்பெற செய்வதே இந்த மனுநீதி நாளின் முக்கிய நோக்கமாகும்.

இங்கு பயனாளிகளுக்கு உதவிகள் கொடுத்திட மட்டுமல்லாமல் பொது மக்களாகிய உங்களின் உரிமைகளை எங்களிடம் கேட்டு நலத்திட்டம் பெற வேண்டும் என்பதனை உங்களுக்கு உணர்த்திடவும் வந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் திகழ்ந்து வருகிறது.

மக்கள் தொடர்பு முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 135 மனுக்கள் பெறப்பட்டு 94 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல்வேறு ஆணைகள் வழங்க ப்பட உள்ளன. மீதமுள்ள 43 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர்மு ருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர்யு ரேகா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News