உள்ளூர் செய்திகள்

நலதிட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்

கயத்தாறு அருகே 110 ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-02 08:57 GMT   |   Update On 2022-12-02 08:57 GMT
  • நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
  • 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்கள் 110 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை செட்டி குறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.

இதில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனம், ஏழை, எளியோர், முதியோர், ஊனமுற்றோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 110 பயனாளிகளுக்கு 25 கிலோ அரிசி பை, 32 வகை மளிகை பொருட்கள், 2 லிட்டர் சமையல் எண்ணெய் உட்பட 7 லட்சம் மதிப்புள்ள 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சஜின், ஜஸ்டின், பென்சீர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News