உள்ளூர் செய்திகள்

நட்டாத்தியில் கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-11-02 09:02 GMT   |   Update On 2023-11-02 09:02 GMT
  • நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசினார்.

சாயர்புரம்:

நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பஞ்சாயத்து துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கபட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

தொடர்ந்து பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் மற்றும் சால்வை கொடுத்து கவுரவபடுத்தினார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் வேலை அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். பலவேறு அரசு துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மருந்து மாத்திரைகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கோபால கிருஷ்ணன், சாயர்புரம் ஆர்.ஐ. விஜய் ஆனந்த், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் உலகநாதன், செயலர் ஜெயஸ்ரீ, திருவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பானு.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவகலா, ஸ்ரீவை யூனியன் துணை தலைவர் விஜயன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பற்றாளர் ஜோசப், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாம்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அன்னகனி, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, சரோஜா, கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், பிரியா, மணிமந்திரம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் முத்துராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News