உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக்கில் முதலாம்ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

Published On 2023-08-23 13:01 IST   |   Update On 2023-08-23 13:01:00 IST
  • தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
  • மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர் பிறகு கல்லூரி முதல்வர் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் உமையாள் முருகேசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி்விழாவினை தொடங்கி வைத்தார்.

செயலாளர் காமராஜர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர். கல்லூரி முதல்வர் வேல்விழி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.

துணை முதல்வர் ராஜீவ் வரவேற்புரை வழங்கினார். துறைத் தலைவர்கள் ஸ்டெல்லா மேரி, சாகுல் ஹமீத், கதிரேசன், ரதிமாலா ஆகியோர் அவர்தம் துறைசார்ந்த விபரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் இலக்கியாதேவி நன்றியுரை வழங்கினார். மாணவர்கள் மற்றும்பெற்றோர்களும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்போஸ் விழாவினை தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News