உள்ளூர் செய்திகள்

அரூர் பகுதியில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-07-20 12:29 IST   |   Update On 2023-07-20 12:29:00 IST
  • அரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
  • சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25.7.2023 முதல் 27.7.2023 வரை இம்மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

தருமபுரி,

தருமபுரி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்ட பராமரிப்பு கோட்டம் தருமபுரி கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அக்ரஹாரம் அருகில் நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 25.7.2023 முதல் 27.7.2023 வரை இம்மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

எனவே மேற்கண்ட பகுதிகளில் இம்மூன்று நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News