உள்ளூர் செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Published On 2023-07-25 15:18 IST   |   Update On 2023-07-25 15:18:00 IST
  • குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
  • இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி,

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம், தளி ஒன்றியங்களில் நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம், ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி, கெலமங்கலம் ஒன்றியத்தில் 22 ஊராட்சிகள் மற்றும் தளி ஒன்றியத்தில் 22 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கெலமங்கலம் ஒன்றியம் ஜக்கேரி அருகில் ராயக்கோட்டை - அத்திப்பள்ளி மாநில சாலை எண்.85 சாலையில் 4 வழி சாலை விரிவாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News