உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பாம்பாறு அணை முழு கொள்ளவு எட்டியுள்ள நிலையில் உபரிநீர் வெளியேற்றப்படுவதை படத்தில் காணலாம்.

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து 5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம்

Published On 2022-08-30 15:27 IST   |   Update On 2022-08-30 15:27:00 IST
  • ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே 5 மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்த மழை மற்றும் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக பாம்பாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

அதன் முழு கொள்ளளவான 19.6 அடியை அணை எட்டியது.இதையடுத்து அணைக்கு வரும் 5250 கன அடி நீரை அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே 5 மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பாம்பாறு ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

Tags:    

Similar News