கோப்பு படம்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிப்பு
- தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை
- பருவமழை தாமதமாகி வருவதால் கேரளாவில் மழை இல்லை. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லை–ப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல் சாகுபடி நடைபெறும் இப்பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் ஜூன் 1ந் தேதி வழக்கம்போல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பருவ–மழை தாமதமாகி வருவ–தால் கேரளாவில் மழை இல்ைல. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு 116 கன அடி நீர் மட்டுமே வருகிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் 131 அடியாக குறைந்துள்ளது. நேற்று பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர் திறப்பு 511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கடந்த 8 மாதத்திற்கு மேலாக 60 அடிக்கு மேல் நீடித்து வந்த வைகை அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 57.76 அடி நீர்மட்டம் உள்ளது. பாசனத்திற்கு 800 கன அடி நீர், மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் என மொத்தம் 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. 113 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணை 1, மஞ்சளாறு 3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.