உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்கள்.
பழனி மலையில் பாறைகள் உருண்டு குடிநீர் குழாய் சேதம்
- மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது.
- கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலுக்கு கோடைகால நீர்தேக்கம் , பாலாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதான சேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மலைக்கோவிலில் இருந்து 200 அடியில் சிறிய அளவிலான பாறை உருண்டு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களின் மீது விழுந்ததால் குழாய்கள் சேதம் அடைந்தது. பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்ய தனி படிப்பாதையான திருமஞ்சன பாதை உள்ளது.
இந்தப் பாதையின் அருகில் பாறைகள் உருண்டு விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, இதனால் பழனி மலை கோவிலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏற்கனவே தண்ணீர் உயர்நிலை நீர் தொட்டி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் கோவில் ஊழியர்கள் உடைந்த தண்ணீர் குழாயை துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர்.