உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாததால் 58 அடியாக உயர்ந்த வைகை அணை நீர் மட்டம்

Published On 2023-10-20 10:54 IST   |   Update On 2023-10-20 10:54:00 IST
  • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
  • பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொட்டக்குடி ஆகியவை மூலம் அணைக்கு தண்ணீர் வருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. வைகை அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு முதல் மற்றும் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 58.14 அடியாக உயர்ந்து ள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு 1445 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.65 அடியாக உள்ளது. 1189 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1322 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 123.98 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News