உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி

Published On 2023-07-26 11:49 IST   |   Update On 2023-07-26 11:49:00 IST
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
  • பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி:

இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்திரவின்படி, 2024 ஜனவரி 1-ஆம் நாளை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, தேனி மாவட்ட த்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்க ப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல்,

இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். முத ற்கட்ட பணியாக 21.07.2023-முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவ ரங்களை சரிபார்க்க உள்ளனர்.

இத்திட்டத்தினை சிறப்பாக, விரைவாக மற்றும் 100 சதவீத உண்மை யாகவும், முடிக்கும் வகை யில், பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டுக்கொ ண்டுள்ளார்.

Tags:    

Similar News