மின்சாரம் தாக்கி பலியான ஷாருத்.
மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
- தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த மெக்கானிக் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பொன்விழா மைதானம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு ஏ.சி. பொருத்து வதற்கான பணிகள் நடைபெற்றது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஷாருத் (வயது 24) என்பவர் இன்று காலை ஏ.சி. பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏறி நின்ற ஏணி நிலைத்தடுமாறியதால் மின் கம்பி மீது அவரது கைகள் பட்டதால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.