உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.

கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடி ஏற்றினார்

Update: 2022-08-15 09:18 GMT
  • 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடியை ஏற்றினார்.
  • ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது சுதந்திரதின விழா இன்று காலை நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய 179 அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்ப ட்டது. மேலும் 3 பயனாளி களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் சுதந்திர தின தியாகிகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், சமூக சேகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், அவரது அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ், யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர், வட்டார அலுவலகத்தில் சாந்தி போத்திராஜ், நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடியேற்றி வைத்தனர்.

நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்த லைவர் தனலட்சுமி, கமி ஷனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நீதிபதிகள் சிந்துமதி, கவிதா, ராஜ்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடியே ஏற்றி 75-வது சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Tags:    

Similar News