உள்ளூர் செய்திகள்
பலியான கார்த்திக்
- மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 25). இவரும், முத்துப்பாண்டி என்பவரும் சிவகாமிபுரம் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்திக் ஒரு பிரிட்ஜை பழுது பார்க்கும்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.