கார்-மொபட் மோதி பெண் பரிதாப சாவு
- அருப்புக்கோட்டை அருகே கார்-மொபட் மோதி பெண் பரிதாப இறந்தார்
- இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி (வயது30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்வி அருப்புகோட்டை ஊர் காவல் படையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுரையில் நடந்த உறவினர் விசேஷ நிகழ்ச்சிக்கு நண்பர் லட்சுமணன் (26) என்பவருடன் செல்வி மொபட்டில் சென்றார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் 2 பேரும் ஊருக்கு புறப்பட்டனர். மொபட்டை செல்வி ஓட்டி வந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வி, லெட்சுமணன் தூக்கி வீசப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். லெட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஏ.முக்குளத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் கல்குறிச்சி பகுதியில் நடந்த விபத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியால் செல்வதால் விபத்தில் சிக்கி இறப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.