உள்ளூர் செய்திகள்

ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கோவை அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. 

கைப்பந்து: சென்னை-கோவை அணிகள் சாம்பியன்

Published On 2022-08-11 08:46 GMT   |   Update On 2022-08-11 08:46 GMT
  • கைப்பந்து போட்டியில் சென்னை-கோவை அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றது.
  • பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

21 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்த 420 ஆண்கள் மற்றும் 26 அணிகள் கலந்து கொண்டன.ராம்கோ ஊர்காவல் படை மைதானம் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள 5 ஆட்டக் களங்களில் 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடந்தன. லீக் முறையில் ஆண்களுக்கு 60 போட்டிகளும், பெண்களுக்கு 34 போட்டிகளும் நடந்தது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை அணியினர் 3 - 0 என்ற நேர் செட் கணக்கில் சேலம் அணியினரை வென்று முதலிடம் பிடித்தனர். 2-ம் இடத்தை சேலம் அணியினரும், 3 -ம் இடத்தை கிருஷ்ணகிரியும், 4-ம் இடத்தை மதுரை அணியினரும் பிடித்தனர்.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கோவை அணியினர் 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியினரை தோற்கடித்தனர். சேலம் அணியினர் 3-வது இடத்தையும், தூத்துக்குடி அணியினர் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த அணியினருக்கு பரிசுக்கோப்பையுடன், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

Tags:    

Similar News