உள்ளூர் செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

Published On 2023-11-02 07:29 GMT   |   Update On 2023-11-02 07:29 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

சிவகாசி

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தீபாவளி வரை போக்குவரத்து மாற்றம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகாசி நகருக்குள் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பிற்பகலில் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே நகர் பகுதிக்குள் கனரக வாக னங்கள் அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட நேரங் கள் தவிர மற்ற நேரங்களில் வெளியூரில் இருந்து லோடு ஏற்றவோ, இறக்கவோ, வரும் கனரக வாகனங்கள், உள்ளூரில் இருந்து வெளியே செல்லும் கனரக வாகனங்கள் திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

கனரக வாகனங்கள் பிள்ளைக்குழி நிறுத்தத்தில் இருந்து இடது புறமாக திரும்பி தெய்வானை நகர், மணிகண்டன் மருத்துவ மனை, மணி நகர் பஸ் நிறுத்தம் வழியாக சிவகாசி பழைய மீன் மார்க்கெட் பகுதியில் சென்று நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் கனரக வாக னங்கள் சாட்சியாபுரம் சாமி யார் மடத்திலிருந்து கங்கா புரம், செங்கமல நாச்சியார் புரம், திருத்தங்கல் தேவர் சிலை, திருத்தங்கல் மாரி யம்மன் கோவில், திருத்தங் கல் செக்போஸ்ட் வழியாக சென்று திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரங்கள் மட்டுமே வெம்பக்கோட்டை ஜங்ஷன் வழியாக பன்னீர் தெப்பம், மணிநகர், பஸ் நிலையம், அம்பலார் மடம் மற்றும் பழனியாண்டவர் தியேட்டர், காரனேஷன் ஜங்ஷன் வரையிலான சாலையில் கனரக வாகனங்களை நிறுத்தி லோடு ஏற்றவோ, இறக்கவோ செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்க கூடாது.

அனைத்து வாகனங்களை யும் மதியம் 3 மணிக்கு காரனே ஷனுக்கு எதிரே இந்து நாடார் பெண்கள் மேல்நி லைப்ப ள்ளிக்கு சொந்தமான மைதானத்திற் குள் சென்று நிறுத்த வேண்டும். பயணிகளை அங்கிருந்து மட்டுமே ஏற்ற வேண்டும். திருத்தங்கல் வழியாக வெளியே செல்ல வேண்டும். சிவகாசி நகருக்குள் வேறு எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க கூடாது. திருத் தங்கல் சாலையிலும் எங்கும் கனரக வாகனங்களை யோ, ஆம்னி பஸ்களையோ நிறுத்தக் கூடாது. திருத் தங்கல் புதிய பஸ் நிலையத்தில் மட்டுமே பயணிகள் மற்றும் பொருட் களை ஏற்ற, இறக்க வேண்டும்.

Tags:    

Similar News