உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் பேசிய காட்சி. அருகில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

விருதுநகர் முழுதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய நிர்வாகிகள், தொண்டர்களாக இருக்க வேண்டும்-அமைச்சர் பேச்சு

Published On 2023-08-31 07:03 GMT   |   Update On 2023-08-31 07:03 GMT
  • விருதுநகர் முழுதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய நிர்வாகிகள், தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
  • அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் வடக்கு மற் றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அவை தலைவர்கள் தங்க–ராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகருக்கு வருகிற 6-ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பேசியதா–வது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி விருதுநகர் வருகை தர உள்ள நிலையில் அன்றைய தினம் விருதுநகர் முழுவதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கும் நிலையை ஏற்ப–டுத்த வேண்டும். மேலும், அன்று காலை 9 மணிய–ளவில் சூலக்கரை மேட்டில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவரை வரவேற்ப–தற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் திர ளாக பங்கேற்க வேண்டும்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்பு மாலை கழக முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய தாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை தருகிற 6-ந்தேதிதான் நமக்கெல்லாம் தீபாவளி. அவரது வருகையை நாம் எல்லோரும் திருவிழாவாக கொண்டாடும் வகையில் அமைய வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையி–ல் தாமிரபரணி நதிக்கரையில் தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சேலத்தில் 2-வது தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய நம்மை தயார்படுத்த தான் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தனுஷ்குமார் எம்.பி., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன் மற்றும் விருதுநகர் நகராட்சி தலை–வர் மாதவன் உள்ளிட்ட நகரசபை தலைவர்கள், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்ளிட்ட யூனியன் தலைவர்கள், பேரூராட்சி தலை வர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News