உள்ளூர் செய்திகள்

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

Published On 2023-06-01 08:51 GMT   |   Update On 2023-06-01 08:51 GMT
  • மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நகராட்சி கூட்டத்தில் தலைவர் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் ரவிகண்ணன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்வமணி, ஆணையர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், ராஜா மான்சிங், சுரேஷ்:-

நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படா ததால் 20 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும் நிலவுகிறது. எனவே குடிநீர் வழக்குவதை முறைப்படுத்தி வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன்:-

வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைகளை சரி செய்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவகுமார்(தி.மு.க):-

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுகிறது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தனியாக செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

சுகாதார அலுவலர் ராமச்சந்திரன்:-

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்வமணி, துணை தலைவர்:-

நகராட்சி பள்ளிகளில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப் படாததால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதார அலுவலர்:-

பள்ளிகள் திறக்கும் முன் நகராட்சி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு தற்போது குறைந்த அளவு குடிநீர் வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகம் தடைபடுகிறது, ஒப்பந்தப்படி சரிவிகித அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் நகராட்சி தலைவர் தங்கம் ரவி கண்ணன் கேட்டுக்கொண் டார்.

Tags:    

Similar News