சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
- விருதுநகரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் உயிர் உரங்களின் பயன் பாடு மற்றும் பயிர் பாது காப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலை மையில் கலெக்டர் அலுவ லக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் ஜெயசீலன் விவசாயிகளின் கோரிக்கை களைக் கேட் டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவ டிக்கை எடுக்க அறிவுறுத்தி னார்.
கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் விவசாயிகளால் வழங் கப்பட்ட மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறி த்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (விவ) எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு தமிழ் மண் வள பாதுகாப்பு வலைதள பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பவர் பாயிண்ட் மூலம் விளக்கமளிக்கப் பட்டது. வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் உயிர் உரங்களின் பயன் பாடு மற்றும் பயிர் பாது காப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் கார்த்திக் ராஜா என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்கும் நோக்கில் வனத் துறை மூலம் வட்டார அளவிலான விவசாயி களு க்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரி வித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து கண் மாய்களிலும் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவதற்கும், சீமைக்கருவேல மரங்களை, வனத்துறையிடமிருந்து மர மதிப்பீடு பெற்ற பின்னர் அவற்றை அகற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பத்மாவதி, மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் மை இயக்குநர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண் டனர்.