உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர். செய்தி உள்ளே...

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்

Published On 2023-06-24 07:54 GMT   |   Update On 2023-06-24 07:54 GMT
  • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
  • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிகள், மருத்துவ மனை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள பொது இடங்களில் மது குடிப்பதும், சில நேரங்களில் போதையில் தகராறில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி 31-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஜெயகவிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News