உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு மத்திய இணை மந்திரி பகவத் கரட் சான்றிதழ் வழஙகினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி உள்ளார்.

பிரதமரின் காப்பீடு-ஓய்வூதிய திட்டம்-மத்திய மந்திரி அறிவுறுத்தல்

Published On 2022-10-13 14:13 IST   |   Update On 2022-10-13 14:13:00 IST
  • பிரதமரின் காப்பீடு-ஓய்வூதிய திட்டத்தில் பொதுமக்கள் சேர்ந்து பயனடைய வேண்டும் மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
  • பாராட்டு சான்றிதழ்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பாக மதிப்பாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரட் தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்க ளிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்து இம்மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக பாரத பிரதமரால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 112 மாவட்டங்களில் தமிழ கத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டும். மேலும் பிரதம மந்திரி காப்பீடு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டும். காப்பீடு செலுத்துவது அவரவர் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் திலகவதி, சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News