உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். 

பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பதிலடி தருவார்கள்-எம்.பி. பேட்டி

Published On 2023-06-17 07:58 GMT   |   Update On 2023-06-17 07:58 GMT
  • பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பதிலடி தருவார்கள்.
  • மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.

விருதுநகர்

சாத்தூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தன்மை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி., ரகுராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவி களுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. பரிசு வழங்கினார். தலைமையாசிரியை மெர்சிக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.மாநிலத்தில் அமைச்சர்க ளின் துறைகளை மாற்றி அமைக்க முதல்-அமைச்ச ருக்கு உரிமை உள்ள நிலை யில் அதனை முறையாக தெரிவித்தும் கவர்னர் ஏற்க மறுத்தது ஏற்புடையதல்ல.

கடந்த 2005-ல் குஜராத்தில் மோடி முதல்-அமைச்சராக இருந்தபோது அமித்ஷா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட்டார்.

ஆனால் தற்போது தமிழக கவர்னர் இதுகுறித்து கேள்வி கேட்டது வியப்பாக உள்ளது. சி.பி.ஐ. அமைப்பு அனுமதி பெற்று தான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கது.

அமலாக்கத்துறை தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழகத்தின் மீது செய்த தாக்குதலாகும். இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலை வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறி னார்.பேட்டியின்போது விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கடற்கரை ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News