உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசினார்.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர்

Published On 2023-01-23 07:35 GMT   |   Update On 2023-01-23 07:35 GMT
  • எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
  • 2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் தேரடி திடலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செய லாளரும், முகவூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.எம்.குருசாமி தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், தில்லுமுல்லு ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார். அதேபோல் கனிமொழி ஒரேயொரு கையெழுத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றார். ஆனால் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் மீதும், கடவுள் மீதும் அச்சம் கிடையாது. ஆகையால் தான் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி யாரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க தயாராகி விட்டனர்.தி.மு.க. ஆட்சி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் ராஜபாளையம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ராஜ பாளையம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.ஜி.ஆர். இளை ஞரணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், மகளிரணி துணை செயலாளர் சந்திரபிரபா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியம்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ்,மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணைசெயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் வனராஜ், ராஜபாளையம் நகர செயலாளர்கள் துரைமுருகேசன்(வடக்கு), பரமசிவம்(தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News