உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் வீணா பேசினார். 

காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு

Published On 2023-01-25 08:42 GMT   |   Update On 2023-01-25 08:42 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
  • இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.

இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News