உள்ளூர் செய்திகள்

லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Published On 2023-05-10 07:32 GMT   |   Update On 2023-05-10 07:32 GMT
  • பிளஸ்-2 தேர்வில் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
  • செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் கிளப் மூலமாக 1979-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு +2 தேர்வில் தேர்வு எழுதிய 201 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பொன் அஜித் குமார் 593 மதிப்பெண்களும், மாணவிகள் பூஜாஸ்ரீ 587 மதிப்பெண்களும், விஜயமதி 585 மதிப்பெண்களும், யுவஸ்ரீ 585 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 56 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 61 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

பல்வேறு பாடங்களில் மொத்தம் 53 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 3 இடங்கள் பெற்றவர்களை பாராட்டும் வகையில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதில் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அரிமா உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பிரி கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் வகையில் மாறுபட்ட நடைமுறைகளில் செய்முறை பயிற்சிகளுடன் கூடிய புதியவகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News