உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவ-மாணவிகள் வெற்றி கோப்பைகளுடன் உள்ளனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மாநில அளவில் சாதனை

Published On 2023-02-23 10:00 GMT   |   Update On 2023-02-23 10:00 GMT
  • கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
  • கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கேரள விளையாட்டு ஆணையம் சார்பில், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை நீச்சல் வீரா் மற்றும் வீராங்கனைகள் 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றனா்.

விருதுநகா் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், கலசலிங்கம் மாணவா்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்று ஆண்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றனா்.

தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த, மாநில ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

மதுரை, புளு ஒசன் ஸ்போர்ட்ஸ் ஏரியா சார்பில், நடந்த ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா். ஸ்ரீவில்லிபுத்துா் ஏகலைவன் கபடி குழுவினா் சார்பில், நடந்த மாநில கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

சிவகாசி சுப்ரீம் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா். கலசலிங்கம் பல்கலை பெண்கள் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

ஆலங்குளம் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா். சாத்தூர் இண்டியன் ஸ்டார் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில வாலிபால் போட்டியில் 2-ம் பரிசு ரூ.8ஆயிரம் பெற்று கோப்பையைப் பெற்றனா்.

வெற்றி பெற்ற அணியினரை பல்கலைகழக வேந்தா் கே.ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுதேவன், மாணவா் நலத்துறை இயக்குநா் முத்துக்கண்ணன், உடற்கல்வி இயக்குநா்கள் எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளா் உதயகுமார் ஆகியோர் பாராட்டினா்.

Tags:    

Similar News