உள்ளூர் செய்திகள்

கார் பராமரிப்பு நிறுவனத்திற்கான நேர்காணல்

Published On 2023-03-13 08:14 GMT   |   Update On 2023-03-13 08:14 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கார் பராமரிப்பு நிறுவனத்திற்கான நேர்காணல் நடந்தது.
  • 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையத்தின் சார்பில் கோவை 5கே கார் கேர் நிறுவனத்துடன் இணைந்து நேர்காணல் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கார் பராமரிப்பு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தினேஷ் தமது நிறுவனத்தில் உள்ள பணி வாய்ப்புகள் மற்றும் பணி வாய்ப்பு பெற்ற நபர்களின் பின்னூட்ட கருத்துக்களை காணொலி காட்சியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

இதில் கார் பராமரிப்பு நிறுவனத்தின் முதன்மை மனிதவள மேலாளர் மணிகண்டன், பயிற்றுநர்-மனிதவள மேலாளர் ஜெயவிஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்களிடம் குழு உரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நேர்காணல் நடத்தினர்.

இதில் கல்லூரியின் பல்வேறு துறை சேர்ந்த மாணவர்கள் 560 பேர் பங்கேற்றனர். 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர். பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் குமாரபாலாஜி நன்றி கூறினார்.

Tags:    

Similar News