உள்ளூர் செய்திகள்

ஜெயா கல்வி குழும செயலர் விஜயகுமாரி உருவ படம் திறப்பு

Published On 2023-07-24 15:09 IST   |   Update On 2023-07-24 15:09:00 IST
  • ஜமீன்நத்தம்பட்டியில் ஜெயா கல்வி குழும செயலர் விஜயகுமாரி உருவ படம் திறக்கப்பட்டது.
  • ஜெயா கல்வி நிறுவனம் தழைத்தோங்கி பலருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது என்று சேர்மன் பேசினார்.

ராஜபாளையம்

சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஜெயா கல்வி குழுமங்களின் நிறு வன தலைவர் பேராசிரியர் கனகராஜின் துணைவியாரும், ஜெயா கல்விக்குழு மங்களின் செயலருமாகிய மறைந்த விஜயகுமாரியின் உருவபடம் திறப்பு விழா அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள ஜமீன்நத்தம்பட்டியில் நடைபெற்றது.

உருவபடத்தை அவரது கணவரும், ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மனுமான பேராசிரியர் கனகராஜ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ராஜபாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறிய ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால் சென்னை திருநின்றவூரில் தொடங்கப்பட்ட ஜெயா கல்வி நிறுவனம் தழைத்தோங்கி பலருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு எனக்கு துணையாய் இருந்தது எனது துணைவியார் விஜயகுமாரி தான்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது என்பது உலக மரபு. அதனை எனது வாழ்க்கையில் கண்கூடாக காண முடியும்.. இன்று கண்ணாடிக்குள் நிழலாகவும் எங்களது கண்களுக்குள் நிஜமாகவும் குடிகொண்டிருக்கும் அவரை ஒவ்வொரு தருணங்களிலும் நினைவு கூற தவறமாட்டோம். அவரை பிரிந்து ரணங்களை தாங்கி நிற்கும் எங்களது விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிவர மறுக்கின்றன. காரணம் ஜெயா கல்வி குழுமங்களின் ஆணி வேர் மீது உப்புதுளிகள் பட்டுவிடக்கூடாது என்று தான்.

இவ்வாறு அவர் பேசினார்

நிகழ்ச்சியில் உற்றார், நகர் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News