உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள்

தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது

Published On 2023-08-31 07:06 GMT   |   Update On 2023-08-31 07:06 GMT
  • தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
  • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி

பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News