உள்ளூர் செய்திகள்

முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

Published On 2022-12-10 12:37 IST   |   Update On 2022-12-10 13:05:00 IST
  • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31-வது பேட்ச் பி.பார்ம், 7- வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி செயலாளர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் ஜெகநாத் பிரபு ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு மருந்தியல் துறையின் எதிர்காலம் குறித்து பேசினர்.

அரவிந்த் ஹெர்பல் லேப் நிர்வாக இயக்குநர் பரத்ராஜ், மெட் பிளஸின் சீனியர் மேனேஜர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவமனை டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News