குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீ பற்றி எரிவதை காணலாம்.
பழைய பொருட்கள் கடையில் தீ விபத்து
- பழைய பொருட்கள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்து குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். விருதுநகர்- சாத்தூர் மெயின் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே இவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது.
இங்கு பழைய இரும்பு, பேப்பர் மற்றும் பொருட் களை வாங்கி வைத்து வியா பாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் நிறுவன வளா கத்தில் குவித்து வைக்கப் பட்டிருந்த பொருட்களில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் மளமள வென எரிய தொடங்கியது. அங்கிருந்தவர்கள் உடனடி யாக போலீசுக்கும், தீயணைப்பு துறையின ருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் ஜெய்சங்கருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமள வென எரிய தொடங்கியது. அவர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.