உள்ளூர் செய்திகள்

விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு நல்லலாபம் கிடைக்கும்

Published On 2023-09-09 08:31 GMT   |   Update On 2023-09-09 08:31 GMT
  • நிறுவனமாக இணைந்து செயல்பட்டால் விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:

நாம் கடையில் சென்று வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும், குறிப்பாக உணவு பொருட்களில், அதன் மிக பெரிய முதலீடை செய்பவர்கள், அதை விளைவிக்கக் கூடிய உற்பத்தியாளர்களான விவசாயிகள். ஆனால் அந்த விலையில் விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு கூட செல்வதில்லை.

பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாபத்தை விவசாயி களுக்கும், உற்பத்தியா ளர்களுக்கும் அதில் இருக்கக்கூடிய தொழிலா ளர்களுக்கும் தர முடியுமா என்று தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து, அதில் முக்கிய முயற்சியாக விவ சாயிகள், உற்பத்தியா ளர்கள் இணைந்து ஒரு நிறுவனமாக செயல்ப டும்போது, லாபத்தை விவசாயிகளும் உற்பத்தி யாளர்களும் பெற முடியும்.

ஒரு பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். அதனை தனி நபரால் செய்ய முடியாது என்பதால் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, செய்வதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.உணவு தயாரிப்ப வர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ரமேஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News