உள்ளூர் செய்திகள்

சிவகாசியில் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தி.மு.க. அரசு எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்துகிறது-முன்னாள் அமைச்சர் பேச்சு

Published On 2023-07-19 13:47 IST   |   Update On 2023-07-19 13:47:00 IST
  • சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

ஆளும் தி.மு.க. எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருட்களின் விலை உயர்வடைந்து உள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி காலங்க ளில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தரு வோம். மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வர வேற்போம். மதிப்பளிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், சிவகாசி மாநகராட்சி பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News