உள்ளூர் செய்திகள்

நெடுஞ்சாலை துறையின் வளர்்ச்சி திட்டப்பணிகள்

Published On 2023-07-02 14:11 IST   |   Update On 2023-07-02 14:11:00 IST
  • நெடுஞ்சாலை துறையின் வளர்்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
  • சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் கோட்டம் திருச்சுழி உட்கோட்டம் ஆலடிப்பட்டி- அம்மன்பட்டி சாலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் சாலையை அகலப்படுத்தும் பணிகளையும், பரட்டநத்தம் அருகே ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் நிறைவு பெற்ற பணிகளையும், இலுப்பையூர் சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பில் 5 சிறு பாலங்கள் நிறைவுற்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் செய்தார்.

அதன் பின்னர் நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தில் சுமார் ரூ.12 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயசீலன் கல்லூரி கட்டும் பணிகளை விரைவாகவும் தரமானதாகவும் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தினை, பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு நிலை,மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி,உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சுந்தரபாண்டி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News